வேலூர் சிறையில் அனுமதியின்றி வெளிநாட்டுக்கு வீடியோ கால் பேசியதாக வழக்கு: முருகன் விடுதலை

#India #Murder #PrimeMinister
வேலூர் சிறையில் அனுமதியின்றி வெளிநாட்டுக்கு வீடியோ கால் பேசியதாக வழக்கு: முருகன் விடுதலை

மத்திய சிறையில் அனுமதியின்றி முருகன் வெளிநாட்டுக்கு வீடியோ கால் பேசிய வழக்கு, வேலூர் நீதிமன்றத்தில் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் முருகன், கடந்த 2020ஆம் ஆண்டு சிறையிலிருந்து அனுமதியின்றி வெளிநாட்டுக்கு வீடியோ கால் பேசியது தொடர்பாக சிறை துறை அளித்த புகாரின் அடிப்படையில் பாகாயம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பான வழக்கு வேலூர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 1ல் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட இருந்தநிலையில், முருகன் வேலூர் மத்திய சிறையில் இருந்து பலத்த காவல்துறை பாதுகாப்புடன் நீதிமன்றம் அழைத்து வரப்பட்டார்.

மத்திய சிறையில் இருந்து வெளிநாட்டுக்கு வீடியோ கால் பேசிய வழக்கில் இருந்து முருகனை விடுதலை செய்து வேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்தது. அரசு தரப்பிலிருந்து போதிய சாட்சியங்கள் நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4