சூட்சுமமான முறையில் 28 தங்க நகைகளை திருடிச் சென்ற இரு வெளிநாட்டு பிரஜைகள்

Prathees
2 years ago
சூட்சுமமான முறையில்  28 தங்க நகைகளை திருடிச் சென்ற இரு வெளிநாட்டு பிரஜைகள்

காலி, களுவெல்ல பிரதேசத்தில் உள்ள நகைக்கடை ஒன்றிற்கு தங்க பொருட்களை கொள்வனவு செய்வதாக கூறி வந்த வெளிநாட்டு பிரஜைகள் இருவர் சுமார் 7 மில்லியன் ரூபா பெறுமதியான 28 தங்க நகைகளை மோசடியான முறையில் திருடிச் சென்றுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்தனர்.

வெளிநாட்டு பிரஜைகள் இருவரும் கடந்த 24ஆம் திகதி மதியம் முச்சக்கர வண்டியில் இரண்டு சிறிய பைகளுடன் நகைக்கடைக்கு வந்துள்ளனர்.

ஒரு பையில் போலி தங்க நெக்லஸ்கள் இருந்தன. மற்றொன்று காலி பை.
வெளிநாட்டினர் இருவரும் நகைக் கடையில் உள்ள மேசையில் இரு பைகளையும் வைத்துவிட்டு நகைக்கடை உரிமையாளரிடம் தங்க நகைகளின் விலை குறித்து பேசினர்.

நகைகளை பரிசோதித்துவிட்டு சிறிது நேரம் கழித்து 28 தங்கச்சங்கிலிகளை வாங்கவுள்ளதாக  நகைக் கடையின் உரிமையாளரிடம் இருவரும்  கூறியுள்ளார்.

கொள்வனவு செய்வதாகக் குறிப்பிடப்பட்டிருந்த 28 தங்க சங்கிலிகளை, வெளிநாட்டைச் சேர்ந்த இருவர் கொண்டு வந்த வெற்று பையில் வைக்கப்பட்டு, பையின் வாயைக் கட்டி நகைக் கடையில் உள்ள மேஜையில் வைத்துள்ளனர்.

அதன் பின்னர் இருவரும் 02 இலட்சம் ரூபாவை செலுத்தி ஒரு தங்க சங்கிலியை வாங்கினார்.

வெளிநாட்டில் இருந்து வந்த இருவர் கொண்டு வந்த போலி நகைகள் அடங்கிய பையும், கடையில் வாங்கிய தங்க நகைகள் அடங்கிய பையும் நகைக்கடை உரிமையாளரின் மேஜையில் வைக்கப்பட்டன.

வெளிநாட்டினர் இருவரும் போலி நகைகள் அடங்கிய பையை மேசையில் வைத்துவிட்டு மிகவும் சாதுர்யமாக வாங்கிய தங்க நகைகள் அடங்கிய பையை எடுத்துச் சென்றுள்ளனர்.

வெளிநாட்டு பிரஜைகள் இருவரில் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

சம்பவம்  தொடர்பில் காலி பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.