உத்தேச 21 ஆம் அரசியலமைப்பு திருத்தச் சட்டமூல யோசனை குறித்து கலந்துரையாடுவதற்காக கட்சித் தலைவர்களுக்கு பிரதமர் அழைப்பு!

Reha
2 years ago
உத்தேச 21 ஆம் அரசியலமைப்பு திருத்தச் சட்டமூல யோசனை குறித்து கலந்துரையாடுவதற்காக கட்சித் தலைவர்களுக்கு பிரதமர் அழைப்பு!

நாட்டிற்கு கிடைக்கக்கூடிய உதவிகளை உடனடியாக பெற்றுக் கொள்வதற்கான சில வேலைத்திட்டங்கள் அமுல்படுத்தப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

உத்தேச 21 ஆம் அரசியலமைப்பு திருத்தச் சட்டமூல யோசனை குறித்து கலந்துரையாடுவதற்காக, கட்சித் தலைவர்களுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று அழைப்பு விடுத்துள்ளார்.

இதன்போது முன்வைக்கப்படும் யோசனைகளைக் கருத்திற்கொண்டு உத்தேச 21ஆம் அரசியலமைப்பு திருத்த யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது.

அமைச்சரவையின் அனுமதி கிடைக்கப்பெற்றதன் பின்னர், அதனை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதேநேரம், உத்தேச 21ஆம் திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

21 ஆம் திருத்தச் சட்டமூலம் தொடர்பான விசேட கலந்துரையாடல் டார்லி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் அதன் தலைவர் மைத்ரிபால சிறிசேன தலைமையில் கடந்த தினம் இடம்பெற்றது.

இதன்போது, இந்த உத்தேச வரைவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் இணக்கம் ஏற்பட்டதாக அமைச்சர் நிமல் ஸ்ரீபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன், 21ஆம் திருத்த சட்டமூலத்திற்கு தேவையான யோசனைகளையும் முன்வைக்க தீர்மானிக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.