இலங்கையில் மின்சார கட்டணங்கள் அதிகரிக்கப்படுவது தொடர்பில் எரிசக்தி அமைச்சர் தகவல்!

Nila
2 years ago
இலங்கையில் மின்சார கட்டணங்கள் அதிகரிக்கப்படுவது தொடர்பில் எரிசக்தி அமைச்சர் தகவல்!

அதிகூடிய மின் பாவனையைக் கொண்ட பாவனையாளர்களுக்கான மின்சார கட்டணங்களை திருத்துவதற்கான யோசனையொன்று சமர்ப்பிக்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சரான காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மின்சார பாவனை தொடர்பில் அனைத்து தரப்பினரும் அக்கறையுடன் செயற்பட வேண்டுமெனவும், நிறுவன மற்றும் தனிநபர் மின்சார பாவனையை குறைக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார். நாட்டில் நிலவும் மின் நெருக்கடியின் தீவிரத்தை மக்கள் புரிந்து கொள்ளவில்லை.

கடந்த 09 வருடங்களாக நிலவும் மின் கட்டண விகிதங்களை திருத்துமாறு இலங்கை மின்சார சபை பல தடவைகள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சில நிறுவனங்கள் வழமையான கட்டணத்தை விட குறைவாக செலுத்தும் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த வசதியும் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் மின்சார உற்பத்தியால் நஷ்டம் ஏற்படுவதாகவும், மருத்துவமனைகள் மற்றும் குறைந்த வருமானம் உள்ள வீடுகள் தவிர்த்து ஹோட்டல்கள், தொழிற்சாலைகள் போன்ற அதிக நுகர்வு கொண்ட சில நிறுவனங்களுக்கு கட்டண திருத்தம் முன்மொழியப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

எனவே, இந்த விடயம் தொடர்பில் அமைச்சரவை மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதியும் கோரப்பட்டுள்ளது.

சில உயர் நுகர்வு வசதிகளுக்கு கட்டணம் இருமடங்கு அல்லது மூன்று மடங்கு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும், எனவே, சூரிய கலங்களின் உதவியைப் பெறுவதே சிறந்த வழி என்றும், சூரிய கலங்கள் மூலம் கூரைகளை பொருத்துவதற்கு விரைவான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் அரசாங்கத்திற்கு சொந்தமான கட்டிடத்தின் மேற்கூரைகளை சூரிய கலங்கள் மூலம் பொருத்துவதற்கான சாத்தியக்கூறுகளை தேடும் வேலைத்திட்டமும் நடந்து வருகிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!