இன்னும் இரண்டு நாட்களில் உணவு நெருக்கடிக்கு வாய்ப்பு

Prabha Praneetha
2 years ago
  இன்னும் இரண்டு  நாட்களில் உணவு நெருக்கடிக்கு வாய்ப்பு

“செப்டம்பர் அல்லது ஒக்டோபர் மாதமளவில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புண்டு” என்று தேசிய விவசாய ஒருங்கிணைப்பின் தலைவர் அனுராத தென்னகோன் கடந்த வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

மல்வத்தை அஸ்கிரிய பீடாதிபதிபதிகளைச் சந்தித்தபின் அவர் ஊடகவியலாளர்களுக்கு மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

”கோத்தபாயவின் தவறான விவசாயக் கொள்கையால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

ரசாயன உரமும் இல்லை, சேதன உரமும் இல்லை.உரத்தட்டுப்பாட்டுடன் இப்பொழுது எரிபொருள் பிரச்சினையும் சேர்ந்துள்ளது.

எரிபொருள்,உரம் இரண்டும் இல்லாததால் விவசாயம் செய்ய முடியாதுள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

”ஒரு வருடத்திற்கு மாத்திரம் 33 இலட்சம் மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்படுகிறது. டொலர் நெருக்கடியால் அதுவும் இல்லை.

தவறான உரக் கொள்கையால் பெரும்போக விவசாயத்தில் விளைச்சல் 60 சதவிகிதத்தால் குறைந்துவிட்டது.

எதிர்வரும் காலத்தில் பெரிய உணவுத் தட்டுப்பாடு ஏற்படப் போகிறது. நடுத்தரவர்க்க மக்களால் கொள்வனவு செய்யமுடியாத அளவுக்கு அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்துச் செல்கிறது.

ஓகஸ்ட் செப்டம்பர் மாதப் பகுதிகளில் உணவு நெருக்கடி வரலாம்.”என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!