திருகோணமலை துறைமுகம் தொடர்பில் இந்திய செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்!
Nila
2 years ago

திருகோணமலைத் துறைமுகத்தை தொழிற்துறை மையமாக அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் திட்டமிப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய செய்தி நிறுவனம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இதன்படி, விசேட பொருளாதார வலயத்தில் தொழிற்சாலைகளை அமைப்பதற்காக இரண்டாயிரம் ஹெக்டேயர் காணியை குத்தகை அடிப்படையில் வழங்கவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த மூலோபாய திட்டத்திற்கான ஒப்பந்தங்கள் இலங்கை அரசாங்கத்தினால் விரைவில் வெளியிடப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையானது இந்து சமுத்திர பகுதியில் புவிசார் அரசியல் ஆர்வத்தை தூண்டுவதாகவும் குறித்த செய்தியில் குறிப்பிடப்படுள்ளது.



