இலங்கை இப்போது செயல்படாத கணினி போல உள்ளது: பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

#SriLanka #Ranil wickremesinghe #Lanka4
Shana
2 years ago
இலங்கை இப்போது செயல்படாத கணினி போல உள்ளது: பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

இலங்கைக்கு புதிய பொருளாதாரத்தை உருவாக்குவதே தனது நோக்கம் என பிரதமர் தெரிவித்தார்.

இன்று (07) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

100வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் 2048 ஆம் ஆண்டளவில் இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதே இலக்கு எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.

இப்போது நம் நாடு செயல்படாத கணினி போல உள்ளதாகவும் எனவே முதலில் இந்த கணினியை ரீசெட் செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த மூன்று வாரங்கள் நாட்டின் நெருக்கடியான காலமாக இருக்கும் எனவும் எனவே அதற்கு முகங்கொடுக்க நாட்டு மக்கள் தயாராகவேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளா்ர.

இதன்காரணமாக எரிபொருள் மற்றும் எரிவாயு கொள்வனவில் பொதுமக்கள், தனித்து செயற்படாது ஏனையவர்கள் தொடர்பிலும் தமது கவனத்தை செலுத்தவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

அத்துடன் தேவையற்ற போக்குவரத்துகளை கட்டுபடுத்தல் உட்பட்ட விடயங்களில் பொதுமக்கள் கவனம் செலுத்தவேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!