பேரணியில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் மீது போலீஸ் தாக்கியதால் தலைவருக்கு எலும்பு முறிவு

#India
Prasu
3 years ago
பேரணியில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் மீது  போலீஸ் தாக்கியதால் தலைவருக்கு  எலும்பு முறிவு

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சட்ட விரோத பணபரிவர்த்தனை தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜரானார். 

அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதற்கிடையே, ராகுல் காந்திக்கு ஆதரவாக, மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் இன்று நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரத்திற்கு இடது விலா எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற பேரணியில் காவலர் தாக்கியதில் எலும்பு முறிவு ஏற்பட்டது என காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4