சர்வதேசத்துடனான ரணிலின் இராஜதந்திர நகர்வுகள்

Kanimoli
2 years ago
சர்வதேசத்துடனான ரணிலின் இராஜதந்திர நகர்வுகள்

இலங்கை தொடர்பில் சர்வதேச நாடுகள் கொண்டுள்ள நிலைப்பாட்டை குறித்தும் கடன் பேச்ச வார்த்தைகள் குறித்தும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட அறிவித்தலொன்றை வெளியிட்டார்.

குறித்த அறிவித்தலில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஜப்பானுடனான நட்புறவில் சில பிரச்சினைகள் காணப்பட்டாலும் தற்போது அவர்களுடனும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நான் அவர்களுடன் தொடர்புகளைப் பேணி வருகின்றேன். அந்நாட்டுக்கான இலங்கை தூதுவர் ஜப்பான் வெளிநாட்டலுவல்கள் அமைச்சரை சந்தித்த போது இலங்கையுடனான தொடர்புகளை மீளக் கட்டியெழுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று இந்த பிராந்தியத்திற்கு பொறுப்பான ஜப்பான் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பணிப்பாளர் நாயகம் எமது வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளரிடம், அடுத்த மாதம் இலங்கைக் விஜயம் செய்ய எதிர்பார்த்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்குத் தேவையான ஒத்துழைப்புகளை வழங்குவேன் என, அமெரிக்க அரசதலைவர் ஜோ பைடன் (Joe Biden) அறிவித்துள்ளார்.

வோஷிங்டனில் தூதுவர்களை சந்தித்தபோது, இலங்கைக்கான தூதுவர் மஹிந்த சமரசிங்கவை சந்தித்த ஜோ பைடன் (Joe Biden) , மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி எமது வேலைத்திட்டங்களுக்கான நிதியை வழங்குவதாக பீஜிங்கிலுள்ள இலங்கை தூதுவரிடம் தெரிவித்துள்ளது. அத்தோடு சீன தூதுவரிடமும் கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளேன்.

ந்தியாவிடமிருந்து தற்போதும் உதவிகள் கிடைக்கப் பெறுகின்றன. இந்தியாவிடமிருந்து எரிபொருளுக்காக மேலும் 500 மில்லியன் டொலர் கடனைப் பெற்றுக் கொள்ள எதிர்பார்க்கின்றோம்.

இது குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடல் உள்ளிட்ட செயற்பாடுகளை துரிதமாக நிறைவு செய்வதற்காக இலங்கையிலுள்ள உயர்ஸ்தானிகர் இந்தியாவிற்கு செல்லவுள்ளார்.

இதே போன்று டொலர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த 7 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளருடன் உரையாடினேன்.

அதற்கமைய எமக்கான வேலைத்திட்டங்களை துரிதமாக செய்து கொடுப்பதாக அவர் உறுதியளித்தார். அத்தோடு 20 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியக்குழுவொன்றை நாட்டுக்கு அனுப்புவதாகவும் கூறினார்.

கஷ்டங்கள், குறைபாடுகள் தற்போது காணப்படலாம். எனினும் மேற்குறிப்பிடப்பட்டவாறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு நிதியைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் பொருளாதாரத்தை வழமைக்கு கொண்டு வர முடியும்.

அதுவரையில் உங்கள் அனைவருக்கும் மோசமான காலமே காணப்படும் என்பதை நான் அறிவேன். பிரச்சினைகள் தோற்றம் பெறும். எனினும் அவற்றை எதிர்கொண்டு தாங்கிக் கொள்வதற்கு உங்கள் அனைவருக்கும் நன்றி கூறுகின்றேன்.

உடனடியாக இந்த பிரச்சினைகளை தீர்க்க முடியாததையிட்டு கவலை தெரிவித்துக் கொள்கின்றேன். எவ்வாறேனும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக நான் மீண்டும் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.

இதேவேளை, தொடரும் நெருக்கடிக்கு மத்தியில் இலங்கைக்கு உதவுவது குறித்து ஆராயுமாறு ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!