கந்தளாய் பிரதேசத்தில் வீதியால் சென்ற எரிபொருள் தாங்கியை மறித்து மக்கள் போராட்டம்
Kanimoli
2 years ago

திருகோணமலை மாவட்டம், கந்தளாய் பிரதேசத்தில் வீதியால் சென்ற எரிபொருள் தாங்கியை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருகோணமலை கண்டி பிரதான வீதி கந்தளாய் 91 ஆம் கட்டைப்பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த வேளையில், எரிபொருள் இல்லையென்று திடீரென கூறியதையடுத்தே மக்கள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் எரிபொருள் தாங்கி உரிமையாளருக்கும், பொதுமக்களுக்கும் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினரும், இராணுவத்தினரும் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர் அங்கு எரிபொருள் வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.



