சதாசிவம் வியாளேந்திரனின் தம்பி சதாசிவம் மயூரன் 15 இலட்சம் இலஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாகப் பிடிபட்டார்.

Kanimoli
2 years ago
சதாசிவம் வியாளேந்திரனின் தம்பி சதாசிவம் மயூரன் 15 இலட்சம் இலஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாகப் பிடிபட்டார்.

 முன்னாள் இராஜாங்க அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பபினருமான சதாசிவம் வியாளேந்திரனின் தம்பி சதாசிவம் மயூரன் 15 இலட்சம் இலஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாகப் பிடிபட்டார்.

இன்று காலை மட்டக்களப்பில்உள்ள தனியார் உணவகம் ஒன்றில் வைத்து 15 லட்சம் ரூபாய் பணம் லஞ்சம் வாங்கும்போது லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆவ்வாறு இலஞ்சம் கோரயவர்களில் ஒருவர் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பபினருமான சதாசிவம் வியாளேந்திரனின் சொந்த தம்பியான சதாசிவம் மயூரன்.

இவர் இவர் பிரதேசசபையின் ஆழும்கட்சி உறுப்பினர். மற்றவர் ஏறாவூர்பற்று பிதேச சபையின் டீ.ஓ.வாகக் கடமையாற்றும் கமலக்கண்ணன். இவரும் முன்நாள் இராஜாங்க அமைச்சரின் நெருங்கிய உறவினர்.

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் தம்பி மயூரன் மற்றும் கமலக்கண்ணன் போன்றவர்களால் இலஞ்சம் கோரப்பட்டவர், கொழும்பில் உள்ள இலஞ்ச ஒழிப்பு திணைக்களத்திற்கு முறையிட்டதைத் தொடர்ந்து, கொழும்பில் இருந்து வந்த சிறப்பு இலஞ்ச ஒழிப்பு பிரிவினரே அவர்கள் இருவரையும் கையும் களவுமாகப் பிடித்ததாக இலஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகம் தெரிவித்தது.

மட்டக்களப்பு நகரிலுள்ள பிரபல உணவகமான 'இப்ராஹிம் ஹொட்டேல' என்ற உணவு விடுதியில் வைத்தே இவர்கள் இலஞ்சப்பணத்தைப் பெற்றுக்கொண்டதாகவும், அந்த உணவு விடுதியில் தயார் நிலையில் மறைந்திருந்த இலஞ்ச ஒழிப்புத்துறை உடனடியாகவே அவர்களை கையும் களவுமாகப் பிடித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாளேந்திரன் தொடர்பாகவும், அவரது தம்பி மயூரன் தொடர்பாகவும் படுகொலைக் குற்றச்சாட்டு உட்பட, மணல்கொள்ளை, இலஞ்சம், கப்பம் கோருதல் என்று ஏராளமான குற்றச்சாட்டுக்கள் இருந்தாலும், வியாளேந்திரனின் தம்பி கையும் களவுமாகப் பிடிபட்ட முதலாவது சந்தரப்பம் என்று இதனைக் கூறமுடியும்.

இவர்கள் இருவரும் தற்பொழுது மட்டக்களப்பு குற்ற தடுப்புபொலிசாரிடம் ஒப்படைக்கபட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிய முடிகின்றது.

கடந்த வருடத்திற்கு முன்னதாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் என் வீட்டு வாசல் தளத்திற்கு முன்பாக சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட பாலசுந்தரத்தின் கொலையிலும் குறித்த இலஞ்ச ஊழல் இருப்பதாக அவருடைய தாயார் பல தடவை தெரிவித்திருந்த போதிலும் இன்றுவரை தன்னுடைய மகனுடைய மரணத்துக்கு நீதிக்காக அலைந்து திரிகின்றனர்.

தற்போது இலஞ்சம் வாங்கியபோதுகைது செய்யப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் தம்பி மயூரன் மற்றும் உயிரிழந்த பாலசுந்தரத்தின் படுகொலைக்கும் இடையில் தொடர்புகள் ஏதும் இருக்கின்றனவா என்ற சந்தேகமும் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!