யாழில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பம்
Kanimoli
2 years ago

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினமும் அதிகளவான மக்கள் பெட்ரோலை பெற்றுக்கொள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் முன்பாக பெருமளவில் கூடி நின்றனர்.
யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதி கஸ்தூரியார் வீதி சந்திக்கு அருகில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெருமளவானோர் பல மணி நேரமாக எரிபொருளுக்காக காத்திருந்த வேளை , மாலை அரச ஊழியர்கள் , அத்தியாவசிய சேவையாளர்கள் என சிலர் இடையில் புகுந்து எரிபொருள் நிரப்ப முற்பட்ட வேளை குழப்பம் ஏற்பட்டது.
பின்னர் சில மணிநேரத்தில் நிலைமை சுமுகமானது. அதேவேளை குழப்ப நிலைமை காரணமாக மின்சார நிலைய வீதி முதல் ஸ்ரான்லி வீதி வரையிலான கஸ்தூரியார் வீதி ஊடான போக்குவரத்து பல மணி நேரம் பாதிக்கப்பட்டு இருந்தது.



