நந்தலால் வீரசிங்கவை மத்திய வங்கியின் ஆளுநர் பதவியிலிருந்து நீக்குவதற்கு எந்த திட்டமும் இல்லை - கோட்டாபய ராஜபக்ச
Kanimoli
2 years ago

நந்தலால் வீரசிங்கவை மத்திய வங்கியின் ஆளுநர் பதவியிலிருந்து நீக்குவதற்கு எந்த திட்டமும் இல்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நந்தலால் வீரசிங்கவை இந்த மாத இறுதிக்குள் மத்திய வங்கி ஆளுநர் பதவியில் இருந்து நீக்கத் திட்டமுள்ளதாக வெளியாகும் தகவல்கள் தொடர்பில், ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற ஆளும்தரப்பு நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாபா பண்டார தெரிவித்த கருத்துக்கு பதிலளித்தபோது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கவின் சேவைக் காலத்தை நீடிப்பதற்கு பிரதமரின் பரிந்துரை அவசியமாகும் என்று ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



