அமெரிக்காவின் உயர்மட்ட தூதுக்குழு இலங்கை வருகை

Prathees
2 years ago
அமெரிக்காவின் உயர்மட்ட தூதுக்குழு இலங்கை வருகை

அமெரிக்க அரசாங்கத்தின் உயர்மட்ட குழுவொன்று உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று (26) காலை இலங்கை வந்தடைந்தது.

அமெரிக்க இராஜாங்க திணைக்களம் மற்றும் அமெரிக்க திறைசேரி திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உயர்மட்ட தூதுக்குழுவினர் எதிர்வரும் 29ம்திகதி  வரை இலங்கையில் தங்கியிருப்பார்கள் என இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

தூதுக்குழுவில் ஆசிய கருவூலத்தின் துணைச் செயலர் ராபர்ட் கப்ரோத் மற்றும் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான துணை இராஜாங்கச் செயலர் கெல்லி கெய்டர்லின் ஆகியோர் அடங்குவர்.

இலங்கையில் தங்கியிருக்கும் போது, ​​இந்த விருந்தினர்கள் பலதரப்பட்ட அரசியல் பிரதிநிதிகள், பொருளாதார நிபுணர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளைச் சந்திப்பார்கள். தேவையிலுள்ள இலங்கையர்கள், தற்போதைய பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு உழைக்கும் இலங்கையர்கள் மற்றும் நிலையான பொருளாதாரத்தைத் திட்டமிடும் இலங்கையர்களுக்கு அமெரிக்கா உதவுவதற்கான மிகச் சிறந்த வழிகளை ஆராய்வதற்காக அந்தச் சந்திப்புகள் அனைத்திலும் இலங்கையர்களுடன் அமெரிக்கப் பிரதிநிதிகள் பணியாற்றுவார்கள் என்றார்.

"இலங்கை மக்களின் பாதுகாப்பு மற்றும் செழிப்புக்கான எமது தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இந்த விஜயம் வெளிப்படுத்துகிறது" என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தெரிவித்தார்.

"இலங்கையர்கள் தங்கள் வரலாற்றில் பல கடுமையான பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ள இந்த நேரத்தில், இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதற்கும் இலங்கையின் ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்துவதற்கும் நாங்கள் எடுக்கும் முயற்சிகள் முன்னெப்போதையும் விட முக்கியமானது" என்று அவர் கூறினார்.

எதிர்வரும் மாதங்களில் இலங்கையர்களின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும்இ உணவுப் பாதுகாப்பின்மையைக் கட்டுப்படுத்துவதற்கும், சுகாதாரம் மற்றும் கல்வியை மேம்படுத்துவதற்கும் தொடர்ந்து ஆதரவளிப்பதாக அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு நிரந்தர தீர்வை வழங்க சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுவதற்கான இலங்கையின் தீர்மானத்திற்கு இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் வலுவாக ஆதரவளிக்கிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!