எரிபொருளை சேமித்து வைத்திருந்த 675 பேர் கைது
Prathees
2 years ago

கடந்த சில தினங்களில் சட்டவிரோதமாக எரிபொருளை சேமித்து வைத்திருந்த 675 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ நேற்று (26) தெரிவித்தார்.
இதுவரை நாடளாவிய ரீதியில் 670 எரிபொருள் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த சோதனையில் 21,636 லிட்டர் பெட்ரோல், 33,462 லிட்டர் டீசல் மற்றும் 11,100 லிட்டர் மண்ணெண்ணெய் கைப்பற்றப்பட்டதாக அவர் கூறினார்.
இதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொலிஸாரிடம் ஆக்ரோஷமாக செயற்படுபவர்களை காணொளியாக எடுக்குமாறு பொலிஸாருக்கு பொலிஸ் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
எதிர்காலத்தில் இவ்வாறான நபர்கள் மீது வழக்குத் தொடர இந்த காட்சிகள் பயன்படுத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.



