சர்வதேச நாணயநிதியத்திடம் அத்தியாவசியப் பொருட்கொள்வனவிற்காக நிதியைக் கோரிய பிரதமர் !

Nila
2 years ago
சர்வதேச நாணயநிதியத்திடம் அத்தியாவசியப் பொருட்கொள்வனவிற்காக நிதியைக்  கோரிய பிரதமர் !

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக 6 பில்லியன் டொலர்களை சர்வதேச நாணய நித்தியத்திடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரியுள்ளார்.

அத்துடன் ரூபாயை நிலைப்படுத்த மேலும் ஒரு பில்லியன் டொலரையும் அவர் கோரியுள்ள நிலையில் இதற்கு சாதகமான பதில் கிடைக்க வாய்ப்புள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார் .

தற்போது நிலவும் நெருக்கடிக்கு மத்தியில் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என விரும்புவோர் பிரதமருக்கு ஆதரவாக இருந்தால், சாதகமான முடிவு கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார் .

சர்வதேச நாணய நிதியத்தின் உதவி மற்றும் அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பான ஒருமித்த கருத்தே அதற்கான ஒரே வழி என்றும் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

அதேசமயம் மாற்று வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சந்தர்ப்பத்தை வழங்குவார் என்றும் வஜிர அபேவர்தன குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!