வெறிச்சோடிக் கிடக்கும் யாழ் மத்திய பேருந்து நிலையம்! அசௌரியங்களுக்கு உள்ளாகும் மக்கள்
Mayoorikka
2 years ago

வடமாகாண இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்களிற்கு பெற்றோல் வழங்கப்படாமையை கண்டித்து இலங்கை போக்குவரத்து சபை பேரூந்துக்களின் ஊழியர்கள் இன்று (27) பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.
இதனால் வழமையான பேரூந்து சேவைகள் இடம்பெறவில்லை.
மேலும் யாழ். மத்திய பேரூந்து நிலையமும் இன்று காலை வெறிச்சோடிய நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் மிகவும் அசௌரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
இவ்வாறான நிலையில் வடமாகாண ஆளுநர் பேரூந்து பணியாளர்களுக்கு எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுத்துள்ள நிலையிலும் அவை இன்னும் கிடைக்கபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



