யாழில் எரிபொருள் விநியோகத்தில் இராணுவத்தினர் தலையிட்டதால் குழப்பம்!

யாழ்ப்பாணம் - அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் விநியோகத்திற்காக இராணுவத்தினர் பதிவுகளை மேற்கொண்டமையால் அப்பகுதியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காலை முதல் இராணுவத்தினர் மண்ணெண்ணெய் விநியோகத்திற்கு என பதிவுகளை முன்னெடுத்திருந்தனர்.
அதனை கேள்வியுற்று பலர் பதிவுகளை மேற்கொள்ள எரிபொருள் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.
எனினும் எரிபொருள் நிரப்பு நிலையத்தினர், விவசாயிகளுக்கு விநியோகிக்கவே மண்ணெண்ணெய் உள்ளது எனவும், ஏனையோருக்கு வழங்க முடியாது எனவும் கூறியுள்ளனர்.
விவசாயிகளுக்கு மண்ணெண்ணெய் என்ற போதும் தொடர்ந்தும் இராணுவத்தினர் பதிவுகளை முன்னெடுத்துள்ளனர். அதனை அடுத்து குறித்த விடயம் தொடர்பில் கோப்பாய் பிரதேச செயலாளருக்கும், புத்தூர் பலநோக்கு கூட்டுறவுச் சங்க பொது முகாமையாருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து மண்ணெண்ணெய்யை விவசாயிகளுக்கு மாத்திரமே பகிர்ந்தளிக்க உள்ளதாகவும், இதனால் ஏனையோருக்கு விநியோகிக்க முடியாது எனவும் இராணுவத்தினருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து இராணுவத்தினர் பதிவு நடவடிக்கைகளை இடை நிறுத்தியுள்ளனர்.



