போக்குவரத்துக்கான மக்கள் மாற்று வழிகளை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது

Kanimoli
2 years ago
போக்குவரத்துக்கான மக்கள் மாற்று வழிகளை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது

எரிபொருள் பற்றாக்குறையை அடுத்து போக்குவரத்துக்கான மக்கள் மாற்று வழிகளை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கமைய மக்களிடையே மிதிவண்டி பாவனை அதிகரித்துள்ளது. இவ்வாறான பின்னணியில் யாழ்ப்பாணம் மற்றும் அதனை அண்மித்துள்ள மக்கள் தற்போது குதிரை வண்டி போக்குவரத்தில் ஈடுபடுகின்றமை அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

எரிபொருள் நெருக்கடி காரணமாக கொழும்பு உள்ளிட்ட நகர் பகுதிகளில் உள்ள பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

அத்துடன் வாகனங்களை வீட்டிலேயே நிறுத்த வேண்டி ஏற்பட்டுள்ளமையினால் மிதிவண்டி இன்றியமையாததாக மாறியுள்ளது. எனினும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக போக்குவரத்து கட்டுப்பாட்டு மற்றும் வீதி பாதுகாப்பு என்பவற்றுக்கு பொறுப்பான பிரதி காவல்துறைமா அதிபர் இந்திக ஹபுகொட தெரிவித்துள்ளரார்.

மிதிவண்டிகளில் முன்புறமும் பின்புறமும் விளக்குகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். மோட்டார் வாகன சட்டத்திற்கு அமைய மிதிவண்டிகளும் வீதிகளில் பயணிக்கும் ஏனைய வாகனங்களுடன் இணையானது. அவசர சந்தர்ப்பங்களில் உடனடியாக நிறுத்துவதற்கு மிதிவண்டிகளில் தடை ஆளி காணப்பட வேண்டும்.

இரவு வேளைகளில் மிதிவண்டியை பயன்படுத்துவோர் ஏனைய வாகன சாரதிகளின் கண்ணுக்கு புலப்படக் கூடிய வகையில் உள்ள வர்ண ஆடைகளை அணிதல் வேண்டும் எனவும் போக்குவரத்து கட்டுப்பாட்டு மற்றும் வீதி பாதுகாப்பு என்பவற்றுக்கு பொறுப்பான பிரதி காவல்துறைமா அதிபர் இந்திக ஹபுகொட அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!