சீனாவில் விற்பனை காட்சியகங்களை நிறுவி இலங்கை ஏற்றுமதி பொருட்களின் விற்பனைக்கு உதவ சீனா தீர்மானம்!

Nila
2 years ago
சீனாவில் விற்பனை காட்சியகங்களை நிறுவி இலங்கை ஏற்றுமதி பொருட்களின் விற்பனைக்கு உதவ சீனா தீர்மானம்!

சீனாவில் விற்பனை காட்சியகங்களை நிறுவி இலங்கை ஏற்றுமதி பொருட்களின் விற்பனைக்கு உதவ சீனா முன்வந்துள்ளது.

சீனாவின் யுவான், சிச்சுவான், பீஜிங் ஆகிய மாகாணங்களில் இலங்கை ஏற்றுமதி பொருட்களுக்கான காட்சியகங்களை நிறுவுவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அதிகாரிகள், இலங்கைத் தூதுவர் கலாநிதி பாலித கொஹோனாவிடம் உறுதியளித்துள்ளனர்.

இந்த விற்பனை காட்சியகங்களை நடத்துவதற்கான செலவை சீனாவின் அந்தந்த மாகாணங்கள் ஏற்றுக்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தனது தயாரிப்புகளுக்கான சீன சந்தையை அணுகுவதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என சீனாவிற்கான இலங்கை தூதுவர் கலாநிதி பாலித கொஹோனா தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!