எரிபொருள் கொள்வனவிற்கு நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு மத்திய வங்கி இணக்கம்
#SriLanka
#Fuel
#Central Bank
Mugunthan Mugunthan
2 years ago

எரிபொருள் கொள்வனவிற்கு நிதியைஒதுக்கீடு செய்வதற்கு இலங்கை மத்திய வங்கி முன்வந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கஎரிபொருளை கொள்வனவு செய்வதற்காக குறிப்பிட்ட நிறுவனங்களிற்கு மிகவும் இறுக்கமான முறையில் நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு இணங்கியுள்ளார்.
கையிருப்பில் உள்ள நிதியை பயன்படுத்தி எரிபொருள் கொள்வனவில் ஈடுபடுமாறு ஜனாதிபதி நேற்று அதிகாரிகளிற்கு உத்தரவிட்டிருந்தார்.
நாட்டிற்கு எரிபொருளை இறக்குமதி செய்யும் விநியோகிக்கும் நிறுவனங்களுடனான பேச்சுவார்த்தைகளின் போதுஜனாதிபதி இதனை தெரிவித்திருந்தார்.
எரிபொருள் விநியோகத்தை மீள ஆரம்ப்பிப்பதற்கு மத்திய வங்கி இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் ஊடாக எரிபொருளை வழங்குவதற்கான இணக்கப்பாடும் இந்த சந்திப்பில் எட்டப்பட்டது.



