எரிபொருள் இல்லை: நீதிமன்றங்களில் அத்தியாவசிய வழக்குகள் மட்டும்..
Prathees
2 years ago

அவசர வழக்குகளுக்கு மாத்திரம் நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நீதிச்சேவை ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
அனைத்து நீதிபதிகளுக்கும் சுற்றறிக்கை மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பொதுப் போக்குவரத்தில் ஏற்படும் சிரமங்களை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் வழக்கின் ஒத்திவைப்பு மற்றும் அதுதொடர்பான விஷயங்களை வழக்கறிஞர் சங்கங்களுடன் பேசி தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.



