வீடுகளில் முடங்கிய மக்கள்

கொழும்பு உட்பட நாட்டின் நெரிசல் மிகுந்து காணப்படும் நகரங்கள் வெறிச்சோடி ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டதனை போன்று காட்சியளிக்கிறன.
முக்கிய வர்த்தக நகரமான கொழும்பு வெறிச்சோடிக் காணப்படுவதுடன் வீதிகளில் மக்கள் நடமாட்டம் குறைந்த மட்டத்திலேயே உள்ளது.
எரிபொருளுக்கு கட்டுப்பாடுகள் விதித்தமை, அலுவலக நேரம், சேவைகள் மட்டுப்படுத்தல் மற்றும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கியமை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
கொழும்பில் போக்குவரத்து நடவடிக்கை இந்த முறையில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கொழும்பிற்கு வெளியே போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையினால் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
சில மாகாணங்களில் பேருந்துகளின் மேல் பகுதியிலும், பின்பகுதியிலும் ஏறி பயணிகள் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, பலாங்கொடையில் பேருந்தின் கூறையின் மீது ஏறி, ஆபத்தான பயணங்களை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.



