அவசர வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு: உயர்நீதிமன்றம் விடுத்துள்ள அறிவிப்பு

Mayoorikka
2 years ago
அவசர வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு: உயர்நீதிமன்றம் விடுத்துள்ள அறிவிப்பு

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பொதுமக்களுக்கு எரிபொருள் வழங்குவதில் கட்டுப்பாடுகள் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, நேற்று முதல் ஜூலை 1ஆம் திகதி வரை திறந்த நீதிமன்றத்தில் 'அவசர வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உயர்நீதிமன்றம், இன்று (28) அறிவித்தது. 

திட்டமிடப்பட்ட மனுக்கள் அல்லது மேல்முறையீடுகளில் ஏதேனும் அவசர வழக்குகள் இருந்தாலோ அல்லது அவை திறந்த நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்றாலோ திட்டமிடப்பட்ட திகதிக்கு முன்னர் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்ற பதிவாளர் அறிவித்துள்ளார்.

அவைகுறித்து பிரதிவாதிகள் அல்லது எதிர் தரப்பினரின் பதிவு செய்யப்பட்ட சட்டத்தரணிகளுக்கு நகர்த்தல் பத்திரம் குறித்த அறிவிப்பு விடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
  
அவசர வழக்குகள் தொடர்பான நகர்த்தல் மனுக்களை மின்னஞ்சல் மூலம் தாக்கல் செய்ய விரும்புவோர், குறிப்பிட்ட திகதிக்கு குறைந்தது இரண்டு நாட்களுக்கு முன்னதாக, உயர் நீதிமன்ற பதிவாளருக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!