நான்கு மாதங்களுக்கு எரிவாயு கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தம் இன்று கைச்சாத்து
Prathees
2 years ago

4 மாதங்களுக்கு தேவையான 1 இலட்சம் மெட்ரிக் தொன் எரிவாயு கொள்வனவு தொடர்பான ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட உள்ளது.
லிட்ரோ நிறுவனத்திற்கும் உலக வங்கிக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளது.
உலக வங்கியின் ஆதரவுடன் இந்த எரிவாயு கையிருப்பு தீவுக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.
இதன் விலை 90 மில்லியன் அமெரிக்க டொலர்கள்.
லிட்ரோ நிறுவனத்தினால் 20 மில்லியன் டொலர்கள் வழங்கப்படவுள்ளதாக பிரதமரின் விசேட குழு பிரதிநிதி முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எரிவாயு கையிருப்பின் ஒரு பகுதிக்கு சொந்தமான கப்பல்கள் ஜூலை 6, 10, 16, 19 மற்றும் 21 ஆகிய திகதிகளில் தீவை அடைய திட்டமிடப்பட்டுள்ளது.
ஜூலை 30 ஆம் திகதிக்குள் தீவு 33,000 மெட்ரிக் டன் எரிவாயுவைப் பெறும் என்று அரசாங்கம் நம்புகிறது.



