எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஊழல் ஐந்து மணிநேரம் ஆர்ப்பாட்டம்

Kanimoli
2 years ago
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஊழல் ஐந்து மணிநேரம் ஆர்ப்பாட்டம்

ஓட்டமாவடி பலநோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிறப்பு நிலையத்தில் தனிப்பட்ட சிலருக்கு பெட்ரோல் விற்பனை இடம்பெறுவதாக கூறி பொதுமக்கள் நேற்று (புதன்கிழமை) இரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த வெள்ளிக்கிழமை (24.06.2022) அரச உத்தியோகத்தர்களுக்கும் பொது மக்களுக்கம் ஓட்டமாவடி எரிபொருள் நிறப்பு நிலையத்தில் ஓட்டமாவடி பிரதேச செயலக அதிகாரிகளின் மேற்பார்வையில் பெட்ரோல் விநியோகம் வழங்கப்பட்டது

இந் நிலையில் அடுத்த நாள் சனிக்கிழமை அத்தியாவசிய சேவையில் ஈடுபடுபவர்களுக்கு எரிபொருள் வழங்கப்பட்ட நிலையில் பெட்ரோல் இயந்திரம் பழுதடைந்த நிலையில் பெட்ரோல் விநியோகம் நிறுத்தப்பட்டிருந்தது.

இன்று புதன்கிழமை பழுதடைந்த பெட்ரோல் இயந்திரம் திருத்தப்பட்ட நிலையில் பெட்ரோல் விநியோகம் இடம் பெற்றதாகவும் பொது மக்களுக்கு பெட்ரோல் விநியோகம் இடம்பெறவில்லை எனவும் எரிபொருள் நிறப்பு நிலையத்தில் ஊழல் இடம் பெறுகின்றது என்றும் கூறி எரிபொருள் நிலையத்திற்கு முன்பாக ஒன்று கூடிய பொது மக்கள் மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் ஓட்டமாவடி மேம்பாலத்திற்கு முன்பாக வாகன போக்குவரத்தை மறித்து தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர்.

அவ் விடத்திற்கு வருகை தந்த வாழைச்சேனை காவல் நிலைய பொறுப்பதிகாரி ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடிய போது எரிபொருள் நிலையத்தில் உள்ள இருப்பை பொது மக்களுக்கு காட்டினால் ஆர்ப்பாட்டத்தை கைவிடுவதாக தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டம் இடம் பெற்ற இடத்தில் இருந்து எரிபொருள் நிறப்பு நிலையத்திற்கு ஆர்ப்பாட்ட காரர்களை அழைத்துச் சென்ற வாழைச்சேனை காவல் நிலைய பொறுப்பதிகாரி பெட்ரோலிய கூட்டுத்தாபன அதிகாரி மற்றும் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் ஆகியோருடன் தொலைபேசியில் உரையாடி வியாழக்கிழமை காலை 08.30 மணிக்கு எரிபொருள்  நிலையத்தில் இருப்பை பரிசோதிப்பது என்றும் இருப்பு இருக்கும் பட்சத்தில் அதனை பொது மக்களுக்கு வழங்க தான் பொறுப்பு நிற்பதாகவும் தெரிவித்ததற்கிணங்க ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்து சென்றனர்.

வியாழக்கிழமை எரிபொருள் இருந்தால் வழங்கப்படும் என்று காவல் நிலைய பொறுப்பதிகாரியினால் வழங்கப்பட்ட உறுதிமொழிக்கமைய  நீண்ட வரிசையில் மக்கள் காத்து நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!