இரண்டாவது பூஸ்டர் தடுப்பூசிக்கு தயாராகுங்கள் - உலக சுகாதார ஸ்தாபனம்

Kanimoli
2 years ago
இரண்டாவது பூஸ்டர் தடுப்பூசிக்கு தயாராகுங்கள் - உலக சுகாதார ஸ்தாபனம்

கோவிட் தடுப்பூசி தொடர்பில் பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சு விசேட அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

ஒமிக்ரோன் திரிபின் உப திரிபுகள் சில உருவாகியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால் மக்கள் நான்காவது கோவிட் தடுப்பூசியை பெற்றுக் கொள்ள வேண்டுமென சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் கோரியுள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள புதிய கோவிட் திரிபுகள் இதுவரையில் இலங்கையில் கண்டறியப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த திரிபுகளினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை தவிர்ப்பதற்கு இரண்டாவது பூஸ்டர் தடுப்பூசியை ஏற்றிக் கொள்வது அவசியமானது என அவர் தெற்கு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

எந்தவொரு நேரத்திலும் உலகின் எந்தவொரு இடத்திலும் கோவிட் புதிய திரிபுகள் உருவாகும் சாத்தியம் உண்டு என அவர் எச்சரித்துள்ளார்.

எனவே கட்டாயமில்லை என்ற போதிலும் முக்க் கவசம் அணிவது நல்ல பழக்கம் எனவும், ஏனைய சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவது பொருத்தமானது எனவும் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.  

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!