பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அருகில் போராட்டம்
Kanimoli
2 years ago

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அருகில் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதன்காரணமாக கொழும்பு 7 பகுதியில் இன்று மாலையில் இருந்து போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இவ்வாறு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளதுடன் வீதித் தடைகளை அமைத்து பாதுகாப்பினை பலப்படுத்தியுள்ளனர்.
இதன்போது அரசாங்கத்திற்கு எதிரான கோஷங்களை எழுப்பிய வண்ணம், பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



