எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நபரொருவரை எட்டி உதைத்த லெப்டினன்ட் கேணல் – வீடியோ எடுத்தவருக்கு கொலை மிரட்டல்!

Prathees
2 years ago
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நபரொருவரை  எட்டி உதைத்த லெப்டினன்ட் கேணல் – வீடியோ எடுத்தவருக்கு கொலை மிரட்டல்!

குருநாகல் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நிராயுதபாணியான பொதுமக்களை தாக்கிய லெப்டினன் கேணல் தொடர்பில் இராணுவத்தினர் நேற்று (04) விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 எரிபொருள் எடுக்க வந்ததாக கூறப்படும் ஒருவரை இராணுவ அதிகாரி தாக்கும் காணொளி இணையத்தில் பகிரப்பட்டதையடுத்து, இராணுவத் தளபதியின் அறிவுறுத்தலின் பேரில் குறித்த இராணுவ அதிகாரி அந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவித்தார்.

குருநாகல் – தம்புள்ளை பிரதான வீதியிலுள்ள யக்கஹாபிட்டிய எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தாக்குதலின் போது, ​​சமூக ஊடகங்களில் வீடியோ வெளியிl;ட குருநாகல் ரசிக ஹேரத் மீது தாக்குதல் நடத்திய இராணுவ அதிகாரி தனக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாக சமூக வலைத்தளங்களுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான இளைஞன் சுமார் 04 நாட்களாக கியூவில் நிற்பதாக சமூக வலைத்தளங்கள் ஊடாக தெரிவித்துள்ள அவர், வரிசைக்கு வெளியில் இருந்து பொலிசார் வந்து எரிபொருள் எடுப்பதால் தனக்கும் மற்றவர்களுக்கும் அநீதி இழைக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

அங்கு பொலிஸாரையோ, இராணுவத்தினரையோ திட்டாமல், பொலிஸ் அதிகாரிகளுக்கு எரிபொருள் வழங்குவது போன்று தனக்கும் குழுவினருக்கும் எரிபொருளை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இராணுவ அதிகாரியின் முன்னிலையில் குறித்த இளைஞனை அழைத்துச் சென்றதாகவும், அங்கு இராணுவ அதிகாரி இளைஞனை மார்புப் பகுதியில் எட்டி உதைத்ததாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன கூறுகையில், எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸார் மற்றும் இராணுவ அதிகாரிகளை கடுமையான வார்த்தைகளால் திட்டியதன் காரணமாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது. எனினும், தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதால் தன்னால் எதுவும் சரியாக கூற முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 இராணுவ அதிகாரி மீதான தாக்குதல் சம்பவம் பதிவு செய்யப்பட்டதாகவும், ஆனால் அதற்கு முன்னர் நடந்தவற்றை பதிவு செய்திருந்தால் விசாரணைகளுக்கு இலகுவாக இருந்திருக்கும் எனவும் பிரேமரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!