கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்த தீர்மானம்
Prabha Praneetha
2 years ago
-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1.jpg)
இவ்வாண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நேற்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
அதேவேளை 2021ஆம் ஆண்டு நடைபெற்ற உயர்தர பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் ஆரம்ப பிரிவு மற்றும் தேசிய பரீட்சைகளுக்கு தோற்றும் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்படும் என்றும் அமைச்சர் சபையில் குறிப்பிட்டார்.



