ஆகஸ்ட் மாதத்தில் சுற்றுலாத்துறைக்கு சுற்றுலா அதிகாரசபை எரிபொருளைக் கேட்கிறது

#SriLanka #Tourist #Fuel
ஆகஸ்ட் மாதத்தில் சுற்றுலாத்துறைக்கு  சுற்றுலா அதிகாரசபை எரிபொருளைக் கேட்கிறது

தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக இலங்கையில் சுற்றுலாத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் வருகை 60 வீதத்தால் குறைந்துள்ளதாக  அண்மையில் தெரிவித்திருந்தது.

எவ்வாறாயினும், நாட்டில் நிலவும் டொலர் நெருக்கடி ஓரளவுக்கு தீர்க்கப்பட வேண்டுமாயின், இந்த நாட்டுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை மிகவும் முக்கியமானது. எனவே சுற்றுலாத்துறைக்கு தேவையான எரிபொருளுக்கு அதிகாரிகள் முன்னுரிமை கொடுப்பது முக்கியம் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

சுற்றுலாத்துறையின் செயற்பாடுகளுக்கு தேவையான எரிபொருள் அளவு குறித்து பெற்றோலிய அமைச்சுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரசபையின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

டிசம்பர் மாதத்தைத் தவிர, பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் ஆகஸ்ட் மாதத்தில் இந்த நாட்டிற்கு வருகிறார்கள். எனவே இம்மாத இறுதிக்குள் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வை வழங்க முடிந்தால் எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் அதிகளவான சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வரவழைக்க முடியும் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் சிரேஷ்ட பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!