ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ள கூட்டத்தை ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் புறக்கணித்து வருகின்றனர்...
#SriLanka
#Sri Lanka President
#Meeting
Mugunthan Mugunthan
2 years ago

நேற்றிரவு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அழைப்பு விடுக்கப்பட்ட ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டத்தில் பெருமளவிலான அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை.
மேலும் சிலர் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என முன்கூட்டியே தெரிவித்ததாகவும், ஆனால் சிலர் அவ்வாறான அறிவிப்பை கூட வழங்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.
இதேவேளை, பயனற்ற பேச்சு வார்த்தைக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஆளும் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.



