கல்வி அமைச்சு எடுத்துள்ள முக்கிய தீர்மானம்!
Prabha Praneetha
2 years ago
2023 ஆம் ஆண்டிற்காக பாடசாலைகளில் முதலாம் தரத்துக்கு மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை அனுப்புவதற்கான இறுதித் திகதிகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.
நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக இது தொடர்பில் பெற்றோர்களிடம் இருந்து பல கோரிக்கைகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி உரிய விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதியை 01.08.2022 வரை நீடிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.