நாட்டினை விட்டு வெளியேறும் வைத்தியர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

Prabha Praneetha
2 years ago
நாட்டினை விட்டு வெளியேறும் வைத்தியர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

நாட்டினை விட்டு வெளியேறும் வைத்தியர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

நம்பகமான ஆதாரங்களில் இருந்து கிடைத்த தரவுகளின் அடிப்படையில் இந்த தகவல்களை வெளியிடுவதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய கடந்த ஜனவரியில் 138 மருத்துவர்களும், பிப்ரவரியில் 172 மருத்துவர்களும், மார்ச்சில் 198 மருத்துவர்களும், ஏப்ரலில் 214 மருத்துவர்களும், மே மாதத்தில் 315 மருத்துவர்களும், ஜூன் மாதத்தில் 449 மருத்துவர்களும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த புள்ளிவிபரங்களின்படி இந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் ஆயிரத்து 486 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!