கொழும்பில் பதற்றம் - மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம்
Nila
2 years ago
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்க காவல்துறையினரால் கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள மத்திய வங்கிக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்ட பேரணி களனி பல்கலைக்கழகத்துக்கு முன்பாக ஆரம்பமாகியிருந்தது.
நாளைய தினம் நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ள ஆர்ப்பாட்ட பேரணிக்கு இணையாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் இன்று இந்த ஆர்ப்பாட்ட பேரணியை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது