போராட்டக்காரர்களுடன் புகையிரதம் - படையெடுக்கும் ஆயிரக்கணக்கானோர்
Kanimoli
2 years ago
கண்டியில் இருந்து அரசாங்கத்திற்கு எதிரான போராட்டக்காரர்களுடன் கொழும்பு நோக்கி புகையிரதம் சென்றுள்ளது.
கொழும்பு காலி முகத்திடலில் இடம் பெறும் போராடத்தில் பங்கேற்பதற்காக நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும் பெருமளவான மக்கள் சென்ற வண்ணம் உள்ளனர்.
இந் நிலையில் கண்டி புகையிரத நிலையத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் ஒன்று "கோ கோம் கோட்டா - ரணில்" என பதாகை ஒன்றை புகையிரத்தத்தின் முன் கட்டியவாறு போராட்டக் காரர்களை ஏற்றி சென்றுள்ளது.