ஜனாதிபதி மாளிகை முன்றலையும் நீர்த்தாரை வாகனத்தையும் கைப்பற்றிய ஆர்ப்பாட்டக்காரர்கள்

Prathees
2 years ago
ஜனாதிபதி மாளிகை முன்றலையும் நீர்த்தாரை வாகனத்தையும் கைப்பற்றிய ஆர்ப்பாட்டக்காரர்கள்

ஜனாதிபதி மாளிக்கைக்கு செல்லும் வீதிகளில் கடுமையான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. பல தடைகள் போடப்பட்டிருந்தன.

அந்தத் தடைகளை எல்லாம் ஆர்ப்பாட்டக்காரர்கள் தகர்தெறிந்தனர். தடைகளை தகர்த்தெறியவிடாமல் பொலிஸார் கண்ணீர்ப்புகை , நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டனர்.

எனினும், தடைகளை தகர்த்தெறிந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் சதாம் வீதி வழியாக ஜனாதிபதி மாளிகையின் பிரதான வாயிலை வந்தடைந்தனர்.  அந்த வாயிலுக்கு முன்பாகவிருந்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

அத்துடன், பொலிஸாரின் நீர்த்தாரை பிரயோக வாகனத்தையும் தம்வசப்படுத்தியுள்ளனர். அந்த வாகனத்தின் மேலே சில ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏறிக்கொண்டனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!