காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்வு - ஜனாதிபதி மாளிகையின் கூரையில் சிங்கக் கொடியை ஏற்றிய போராட்டக்காரர்
போராட்டத்தின் மத்தியில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.
19ல் இருந்து 29ஆக அதிகரித்து தற்போது 33ஆக அதிகரித்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளைஇ கொழும்பு - கோட்டை பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் குழுவொன்று சற்று நேரத்திற்கு முன்னர் ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்துள்ளனர்.
அவர்கள் தொடர்ந்தும் அங்கு தங்கியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி மாளிகையின் மேற்கூரையில் ஒருவர் ஏறி தேசியக் கொடியை ஏற்றி போராட்டம் நடத்தப்படுகிறது.
கொழும்பு - கோட்டை பகுதியில் முன்னெடுக்கப்படும் இந்த போராட்டம் தொடர்கிறது.
அத்துடன்இ ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் உள்ள போராட்ட களத்திற்கு பெருமளவான மக்கள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது ஜனாதிபதி அலுவலகத்துக்குள் சிலர் நுழைந்துள்ளனர்.
ஜனாதிபதி மாளிகையின் மேற்கூரையில் - இளைஞர் ஒருவர் தேசியக் கொடியை அசைத்துக் கொண்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.