நாட்டில் இருக்கும் மிகப் பெரிய முட்டாளாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மாறியுள்ளார் - ஓமல்பே சோபித தேரர்
நாட்டில் இருக்கும் மிகப் பெரிய முட்டாளாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மாறியுள்ளார் என கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று நடத்திய விசேட ஊடக சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
சிங்கள பௌத்த மக்கள் மாத்திரமல்லாது அவருக்கு வாக்களித்த 69 லட்சம் மக்களும் தற்போதைய ஜனாதிபதியின் அதிகாரத்தை சூன்யமாக்கியுள்ளனர்.
அது மட்டுமல்ல. கடந்த ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட கருத்து கணிப்பில் 97 வீதமாக மக்கள் அவரை வீட்டுக்கு போகுமாறு கூறியுள்ளனர்.
கோட்டா கோ என்ற கிராமத்தை காலிமுகத்திடலில் ஆரம்பித்து அது மிகப் பெரிய அமைப்பாக காட்டுத்தீ போல் நாடு முழுவதும் பரவியது. கோட்டாபய தற்போதாவது செல்ல வேண்டும்.
தன்னை தானே முட்டாள் எனக் கூறும் கோட்டாபய எங்களை புத்திசாலித்தனமாக நடக்குமாறு கூறுகிறார்
ராஜபக்ச குடும்பத்தில் முட்டாள் தான் எனக் கூறும் ஜனாதிபதியே நேற்று மாலை அறிக்கையை ஒன்றை வெளியிட்டு மக்களை புத்திசாலித்தனமாக நடந்துக்கொள்ளுமாறு கூறினார்.
மக்களை புத்திசாலித்தனமாக நடந்துக்கொள்ளுமாறு அவர் நேற்று மாலை கூறினார். புத்திசாலித்தனமாக நடந்துக்கொள்ளுமாறு மக்களை யாரை கூறினர்?. ராஜபக்ச குடும்பத்தில் நான் முட்டாள் என அவரே கூறுகிறார்.
ராஜபக்ச குடும்பத்தில் முட்டாள் தான் என அவரே தனது வாயால் கூறுகிறார். அந்த முட்டாள் எங்களை புத்திசாலித்தனமாக நடந்துக்கொள்ளுமாறு தெரிவிக்கின்றார்.
நாட்டில் இருக்கும் மிகப் பெரிய முட்டாளாக கோட்டாபய ராஜபக்ச மாறியுள்ளார். இதனால், அவர் தற்போது மறைந்திருக்கும் இட்த்தில் இருந்துக்கொண்ட ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக அறிவிக்க வேண்டும்.
புதிய ஜனாதிபதியை தெரிவு செய்ய வேண்டும் - ரணிலை ஒரு நொடிக்கு கூட அந்த பதவியில் நியமிக்கக்கூடாது
அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதி தனது அதிகாரத்தை நடைமுறைப்படுத்த முடியாத சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் மக்களின் அதிகாரத்தால் சூன்யமாக்கப்படும்.
இந்த சந்தர்ப்பத்தில் சபாநாயகர், கட்சித் தலைவர்களை கூட்டி தீர்மானத்தை எடுத்து உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டி, நாட்டு மக்களின் உண்மையான பலம் மற்றும் விருப்பத்தை வென்றெடுத்துள்ள நபரை ஜனாதிபதியாக நியமித்து சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைக்க வேண்டும்.
சபாநாயகருடன் நான் கதைத்தேன். உடனடியாக கட்சித் தலைவர்களின் கூட்டத்தை கூட்டுவதாக சபாநாயகர் கூறினார். நாட்டில் ஜனாதிபதி ஒருவர் இல்லை.
நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டி தீர்மானம் ஒன்றை எடுங்கள். புதிய ஜனாதிபதியை நியமிக்க வேண்டும். அவர் கட்சித்தலைவராக மாத்திரமல்ல, நாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருவராக இருக்க வேண்டும்.
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியை தெரிவு செய்ய முடியாது என்றால், தேசிய பட்டியல் ஊடாக சிவில் சமூகத்தை சேர்ந்த ஒருவரை தெரிவு செய்ய வேண்டும்.
ரணில் விக்ரமசிங்க என்ற பொம்மையை ஜனாதிபதியாக தெரிவு செய்யக்கூடாது. மாளிகை சூழ்ச்சியின் மூலம் ரணில் விக்ரமசிங்க என்ற நபரை நாட்டின் ஜனாதிபதியாக ஒரு நொடிக்கு கூட நியமிக்கக் கூடாது எனவும் ஓமல்பே சோபித தேரர் கூறியுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு மக்களின் பலம் இல்லை எனவும் அவரை தொடர்ந்தும் ஜனாதிபதியாக ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் சர்வ மத தலைவர்கள் கூறியுள்ளனர்