தலைமையேற்க தயாரானார் ரணில்!
Mayoorikka
2 years ago
பிரதமர் ரணில் விக்ரமசிங்க புதிய அரசாங்கம் குறித்த தனது நிலைப்பாட்டை வெளியிடவுள்ளதாக தெரியவருகிறது. ஐக்கிய தேசியக் கட்சியை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளிவந்துள்ளது.
சர்வதேசத்தின் நம்பிக்கையை வென்றுள்ள தனக்கு இனி தடையாக யாரும் இல்லை.
ஆகவே தனது தலைமையில் அரசாங்கத்தை அமைக்க இணங்குமாறு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை முன்வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது நடைபெற்றுவரும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது நிலைப்பாட்டை தெரிவிக்கவுள்ளதாக தெரிய வருகிறது.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச பதவி விலக சம்மதம் தெரிவித்துள்ள நிலையிலேயே, பிரதமர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறான கோரிக்கையினை கட்சித் தலைவர்களிடம் முன்வைக்கவுள்ளதாக தெரியவருகிறது.