ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய சிறப்பு அதிரடிப்படையின் அதிகாரி ரொமேஷ் லியனகே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்

Kanimoli
2 years ago
ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய சிறப்பு அதிரடிப்படையின் அதிகாரி ரொமேஷ் லியனகே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்

  கடந்த 9ஆம் திகதி  ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய சிறப்பு அதிரடிப்படையின் சிரேஸ்ட அதிகாரி ரொமேஷ் லியனகே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு வெளியே ஏற்பட்ட அமைதியின்மையின் போது குறித்த அதிகாரி ஊடகவியலாளகள் மீது தாக்குதல் நடத்தியிருந்தார்.

இந்நிலையில் தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காததற்காக பொதுச் சேவை ஆணைக்குழு அங்கீகாரத்தின் கீழ் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் , லியனகே பணி இடைநிறுத்தம் செய்துள்ளார்.

கடந்த சனிக்கிழமையன்று பிரதமரின் தனிப்பட்ட இல்லத்திற்கு வெளியே பணியில் இருந்த காவல்துறை மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் நடத்திய தாக்குதலில் பல செய்தியாளர்கள் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது