அலரி மாளிகையில் பெண்ணின் கழுத்தை வெட்டிய நபர்கள்

Kanimoli
2 years ago
அலரி மாளிகையில் பெண்ணின் கழுத்தை வெட்டிய நபர்கள்

அலரி மாளிகையில் இரண்டு குழுக்களுக்கு இடையில் தீவிர மோதல் நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.  

காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்த சம்பவத்தினால் காயமடைந்த பெண் ஒருவரின் கழுத்து வெட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அலரிமாளிகையில் மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவாளர்களுக்கும் செயற்பாட்டாளர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் போராட்டத்தினை அடுத்து கடந்த 9ஆம் திகதி அலரி மாளிகை, ஜனாதிபதி மாளிக்கை மற்றும் செயலகம் என்பன மக்களின் கட்டுப்பாட்டில் உள்ளதுடன், அங்கு பெருமளவு மக்கள் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!