அரசியல் அமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி நியமனம் சபாநாயகர் பதில் ஜனாதிபதி
நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் 225 பேரையும் மக்கள் நிராகரித்தால் வெளியே உள்ள ஒருவரை ஜனாதிபதியாக நியமிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும், சிரேஸ்ட சட்டத்தரணியுமான கலாநிதி பிரதிபா மஹானாமஹேவா இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசியல் அமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி நியமனம்
பதவிக் காலம் இருக்கும் போதே ஜனாதிபதி பதவி விலகினால் நாடு அராஜக நிலைக்கு தள்ளப்படுவதனை தவிர்க்க தேர்தல் நடைபெறும் வரையில் அரசியல் அமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி ஒருவரை நியமிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் உறுப்பினர் ஒருவரை இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்து கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியும், பிரதமரும் பதவி விலகினால் சபாநாயகர் பதில் ஜனாதிபதியாக கடமையாற்ற முடியும் என தெரிவித்துள்ளார்.
ஒரு மாத காலத்திற்குள் நாடாளுமன்றைக் கூட்டி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை ஜனாதிபதியாக நியமிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், 225 பேர் மீதும் மக்கள் நம்பிக்கை கொள்ளாத சந்தர்ப்பத்தில் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பதவி விலகி அந்த இடத்திற்கு வேறும் மக்களின் நம்பிக்கையை வென்ற ஒருவரை நியமித்து அவரை ஜனாதிபதியாக நியமிக்க முடியும் என பிரதிபா மஹானாமஹேவா தெரிவித்துள்ளார்.
![உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!](https://assets.lanka4.com/banner/you.png)
![உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!](https://assets.lanka4.com/banner/fb.png)
![உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!](https://assets.lanka4.com/banner/ins.png)
![உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!](https://assets.lanka4.com/banner/tiktok.png)