கடமைகளிலிருந்து குடிவரவு, குடியகல்வு அதிகாரிகள் விலகல்
Mayoorikka
2 years ago
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், அதிதிகளுக்கான நுழைவாயிலில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் சோதனை நடவடிக்கையிலிருந்து விலகியுள்ளனர்.
குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள அரசியல் பிரமுகர்கள், நாட்டிலிருந்து வௌியேறுவதற்காக சேதமாவத்த அதிதிகளுக்கான நுழைவாயிலை பயன்படுத்துவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதன் காரணமாக அந்த பகுதியில் சோதனை நடவடிக்கையிலிருந்து விலகியுள்ளதாக இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் K.A.A.S. கணுகல குறிப்பிட்டார்.