இந்திய மீனவர்கள் 6 பேர் கைது

Mayoorikka
2 years ago
இந்திய மீனவர்கள் 6 பேர் கைது

SEA OF SRI LANKA எனப்படும் இலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறிய இந்திய மீனவர்கள் 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் – காரைநகருக்கு மேற்கு கடல் பகுதியில் நேற்றிரவு இலங்கை கடற்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீனவர்களின் படகொன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக, கடற்றொழில் திணைக்களத்தின் யாழ்.மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் தெரிவித்தார்.

கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை இன்று(12) பொறுப்பேற்கவுள்ளதாக கூறிய அவர், பொறுப்பேற்றதன் பின்னர் குறித்த மீனவர்களுக்கு எதிராக அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் சுட்டக்காட்டியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!