பங்காளிக் கட்சிகளிடையே கலந்துரையாடல்
நாட்டின் தற்போதைய அரசியல் நெருக்கடி நிலைமையில் சரியானதொரு இடைக்கால சர்வகட்சி அரசாங்கம் அமையுமாக இருந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியில் இருந்து ஆதரவு வழங்கலாம் இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான புளொட் அமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
சர்வகட்சி அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கெடுக்குமா என்பது தொடர்பில் ஊடகம் ஒன்றால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அத்துடன் இடைக்கால சர்வகட்சி அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்பது தொடர்பில் இதுவரை கூட்டமைப்பு பங்காளிக் கட்சிகளிடையே முறையான கலந்துரையாடல் நடைபெறவில்லை
நாம் சர்வகட்சி அரசாங்கத்தில் பங்காளியாகாமல் வெளியில் இருந்து ஆதரவு வழங்கலாம் என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயம்.
நாட்டின் தற்போதைய பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்க்கவேண்டும். அதற்காக சரியானதொரு சர்வகட்சி அரசாங்கம் அமைய வேண்டும். அதற்காக நாம் அவர்களுடன் பங்காளிகளாக முடியாது என குறிப்பிட்டுள்ளார்.