சீனாவை மிஞ்சும் இந்தியாவின் மக்கள் தொகை! ஜக்கிய நாடுகள் நிறுவனம் தெரிவிப்பு

Nila
2 years ago
சீனாவை மிஞ்சும் இந்தியாவின் மக்கள் தொகை! ஜக்கிய நாடுகள் நிறுவனம் தெரிவிப்பு

ஜக்கிய நாடுகள் நிறுவனம் நேற்றைய தினம் உலக சனத்தொகை தொடர்பான விபரங்களை வெளியிட்டுள்ளது.

மேற்படி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

உலக மொத்த சனத்தொகை எதிர்வரும் நவம்பர் 15ம் திகதி 8 பில்லியனை தொடும் என்றும் அதேவேளை இன்னும் 60 வருடங்களில் 10.5 பில்லியனை எட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 2023ம் ஆண்டில் இந்தியா உலகின் முதலாவது அதிக மக்கள் தொகையை கொண்ட நாடு என்ற பெயரை பெற்றக் கொள்ளும் எனவும் தெரிவித்துள்ளது.

தற்போது உலகில் அதிக மக்கள் தொகையை கொண்ட நாடாக சீனா காணப்படுகின்றது.

எதிர்வரும் ஆண்டில் சீனா மற்றும் இந்தியா 1.4 பில்லியன் மக்கள் தொகையை பகர்ந்து கொள்ளும் எனவும், இந்தியாவின் தொகை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் மொத்த நிலப்பரப்பானது இந்தியாவின் மொத்த நிலப்பரப்பை விட மூன்று மடங்கு பெரியது.

ஆனால் சீனா மக்கள தொகை அதிகரிப்பிற்கு எதிராக சட்டங்களை விதித்துள்ளமையும் இந்தியாவில் இதுவரை அவ்வாறான சட்டங்கள் ஏதும் விதிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.