ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு விசா வழங்க அமெரிக்கா மறுப்பு!

Nila
2 years ago
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு  விசா வழங்க அமெரிக்கா  மறுப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு விசா வழங்குவதற்கு அமெரிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் 15 வரையிலான அவரது நெருங்கிய குடும்ப உறவினர்கள் மற்றும் உதவியாளர்கள் விமான நிலையம் ஊடாக நாட்டை விட்டு வெளியேறுவதற்கு மேற்கொண்ட பல முயற்சிகள் தோல்வி அடைந்துள்ளன. 

அதேவேளை, அமெரிக்காவுக்கு செல்வதற்கு ஜனாதிபதி விசா விண்ணப்பித்த போதிலும் அமெரிக்க அதனை மறுத்துள்ளது. 

இதேவேளை, இலங்கை விமானபப்டையின் விமானங்கள் இந்திய மண்ணில் தரை இறங்குவதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. 

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ நாட்டை விட்டு வெளியேறுவதற்கு மேற்கொண்ட முயற்சிகளும் விமான நிலைய அதிகாரிகளினால் முறியடிக்கப்பட்டுள்ளன.

திருகோணமலை கடற்படை முகாமில் தஞ்சம் புகுந்திருந்த ஜனாதிபதி மற்றும் உறவினர்கள் , நேற்று திங்கட் கிழமை இரண்டு பெல் 412 ரக உலங்கு வானூர்தி மூலம் கொழும்பு ரத்மலான விமான நிலையத்துக்கு சென்றிருந்தார்.

அங்கே, முப்படையினரின் தளபதிகளை சந்தித்துவிட்டு, மாலை கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு சென்றார். அங்கிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் UL225 ஊடாக டுபாய்க்கு அவர்கள் ஜனாதிபதியும் அவரது உறவினர்களும் அனைவரும் செல்வதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. 

ஆனால், அவர்களை குடிவரவு பகுதிக்கு அவர்களின் கடவுசீட்டுக்களை ஸ்டாம் பண்ணுவதற்கு வருமாறு குடிவரவு அதிகாரிகள் நிர்ப்பந்தித்தனர். 

ஆனால், பாதுகாப்பு காரணங்கள் காரணமாக அந்த பகுதிக்கு செல்வதற்கு அவர்கள் மறுத்தனர். அதேநேரம் , விசேட மற்றும் அதி விசேட அதிதிகள் செல்லும் குடிவரவு பகுதியில் பணியாற்றும் அதிகாரிகள் சனிக்கிழமை இரவு முதல் தமது பணிகளை இடை நிறுத்தி இருந்தனர்.

அதேசமயம், ஜனாதிபதியை ஏற்றிக்கொண்டு சென்ற இலங்கை விமானப்படைக்கு சொந்தமான AN32 என்ற விமானம் இந்திய விமானம் நிலையம் ஒன்றில் தரை இறங்குவதற்கு இந்தியா மறுத்துள்ளதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இதன் காரணமாக, இலங்கை விமானப்படை முகாம் ஒன்றில் ராஜபக்ஸ நேற்றைய இரவை கழித்தார்.