சர்வதேச செய்தி சேவையில் தோன்றிய தலைமறைவாக இருந்த அர்ஜுன் மகேந்திரன்!

Prasu
2 years ago
சர்வதேச செய்தி சேவையில் தோன்றிய தலைமறைவாக இருந்த அர்ஜுன் மகேந்திரன்!

பிணைமுறி மோசடி தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன், CNN இன் நேர்காணலுக்காக இணைந்துள்ளார். 

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து கருத்து தெரிவிக்கும் வகையில் இந்த காணொளி அமைந்துள்ளது.

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள், கொவிட் தொற்றினால் ஏற்பட்ட பாதிப்புகள், புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் வழங்கப்பட்ட வரிச்சலுகைகள் மற்றும் விவசாயத் துறையில் புதிய அரசாங்கம் எடுத்த தீர்மானங்களே  தற்போதைய பொருளாதார நெருக்கடியின் பிரதானமான காரணிகள் என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் தெரிவித்தார்.

இலங்கை தற்போது எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபட வரிப்பணத்தை திரட்டி விவசாய கைத்தொழிலை புத்துயிர் பெறச் செய்ய வேண்டும் என முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், பணத்தை அச்சடித்தல் போன்றவற்றின் மூலம் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டைக் காப்பாற்றுவது கடினம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2015ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன், சிங்கப்பூரில் இருந்து ஒன்லைன் ஊடாக CNN செய்திச் சேவைக்கு பேட்டியளித்தார்.