ஜனாதிபதி கோட்டாபய இன்று அதிகாலை வான்படை விமானத்தில் நாட்டைவிட்டு வெளியேறினார்!

Reha
2 years ago
ஜனாதிபதி கோட்டாபய இன்று அதிகாலை வான்படை விமானத்தில் நாட்டைவிட்டு வெளியேறினார்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்று அதிகாலை நாட்டிலிருந்து வெளியேறி மாலைதீவுக்கு சென்றுள்ளதாக, கட்டுநாயக்க விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகாலை 1.45 அளவில் இலங்கை வான்படைக்கு சொந்தமான அண்டோனோ 32 ரக விமானத்தில், ஜனாதிபதி நாட்டிலிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதியுடன், அவரது பாரியாரும், அவர்களின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரும் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், ஜனாதிபதி நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக பிபிசி, சி.என்.என், அல்ஜசீரா உள்ளிட்ட வெளிநாட்டு ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று தமது பதவியிலிருந்து விலகுவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அண்மையில் தெரிவித்திருந்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!